துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 7பேரின் உடல்கள் மறு கூறாய்வு செய்யப்பட்டு 5 பேர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டு 2 பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் ஏற்கெனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேருக்கு மறுஉடற்கூறாய்வு நடத்த வேண்டும் உடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கந்தையா, ஸ்னோலின், தமிழரசன், செல்வசேகர், காளியப்பன், சண்முகம், கார்த்திக் ஆகிய 7பேரின் உடல்கள் மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதில் செல்வசேகர் தடியடியில் உயிரிழந்ததாகவும், காளியப்பன் ரப்பர் குண்டடிப்பட்டும் உயிரிழந்ததாக, மற்றவர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளததாக கூறப்பட்டது. இதில் ஸ்னோவின், தமிழரசன் உடல்களை தவிர மற்ற 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 2 பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்