பெரம்பலூர் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். 13 பேர் படுகாயமடைந்தனர். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று 40 பயணிகளுடன் புறப்பட்டது. இன்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்த விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.