கோவையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை சுங்கவரி துறை அணியும் பெண்கள் பிரிவில் திருவனந்தபுரம் கேரள மின்வாரிய அணியும் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றன. கடந்த 26-ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து 20 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை சுங்கவரி துறை அணியை எதிர்த்து டெல்லி இந்தியன் ரயில்வே அணியுடன் விளையாடியது.