தமிழகத்தில் இரு மாவட்டங்களில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலி- வீடியோ

2018-05-31 1,003

தமிழகத்தில் இரு மாவட்டங்களில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சில்வார்பட்டியை சேர்ந்த அழகுராஜா மற்றும் வனப்பான்டி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் டேங்கர் லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ள பகுதியில் கரூர் சென்ற லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தமிழ் மணி கணிகை வேல் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காரில் பயணம் செய்தவர்கள் சேவல் சண்டைக்கு சென்று கொண்டிருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

des : The death toll in the death toll in two districts in Tamil Nadu has triggered a tragedy.

Videos similaires