கட்டையால் அடித்து கர்பிணி கொலை ! கணவன் கைது- வீடியோ

2018-05-30 783

மனைவியை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்து தப்பி சென்ற கணவனை 12 மணி நேரத்தில் பிடித்த போலிசார் விசாரனை நடத்திவருகின்றனர்

புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகர் பகுதியைச் சார்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சரஸ்வதி. சமையல் கூடத்தில் தாற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.ஞாயிற்றுக்கிழமைகாலை ஆறுமுகம் தனது மனைவி சரஸ்வதியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்து. இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் அங்கிருந்த உருட்டு கட்டையால் மனைவியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ஆறுமுகம் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து லாஸ்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 12 மணி நேரத்தில் கைது செய்து விசாரனை நடத்திவருகின்றனர் துரிதமாக செயல் பட்டு கொலையாளியை பிடித்த போலிசாருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்

Videos similaires