காலா: ரஜினி படமா? ரஞ்சித் படமா?...வீடியோ

2018-05-29 1

காலா படம் ரஜினி ஆதரவாளர்கள் எதிர்ப்பார்த்தது போன்று அமையவில்லை.
தலித் உரிமைகள் பற்றி பேசும் பா. ரஞ்சித் ரஜினிகாந்தை வைத்து கபாலி படத்தை எடுத்து வெற்றி கண்டார். ரஜினி மூலம் தான் கூற விரும்பியதை அழகாகவும், எளிதாகவும் தெரிவித்து மக்களை சென்றடைய வைத்தார்.
இதை பார்த்த ரஜினிக்கு ரஞ்சித்தின் யுக்தி புரிந்தது. கபாலியில் ரஞ்சித் தனது அரசியலை பேச அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்து காலா படத்தில் தனது அரசியலை ரஜினி பேசுகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் பெருமைப்பட்டனர்.
நேற்று வெளியான காலா ட்ரெய்லரை பார்த்ததுமே இது ரஜினி பேசும் அரசியல் இல்லை ரஞ்சித்தின் அரசியல் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. ரஜினி ஆதரவாளர்கள் எதிர்பார்த்தது போன்று அமையவில்லை.



Videos similaires