அம்மா ஆடியோ டிடிவி விமர்சனம்

2018-05-29 604

TTV Dinakaran said that the audio was released to divert the incident in Thoothukudi.

தூத்துக்குடி சம்பவத்தை திசைதிருப்பவே அம்மாவின் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் ஜனநாயக முறைப்படி போராடியவர்களை தீவிரவாதிகள் போல் நினைத்த காவல்துறை கொடூரமாக கொலை செய்துள்ளதாக கூறினார். துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவர் மத்திய அரசை மக்கள் ஒரு பொருட்டாக மதிக்க வில்லை என்றார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தை திசை திருப்பவே அம்மாவின் ஆடியோவை வெளியிட்டுள்ளனர் என்றார்.