தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னை புழல் சிறையில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆறுதல் சொல்லச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார்.