Actor Simbu released a video condemning Tamilnadu government on Tuticorin firing incident.
Actor Simbu, who recently issued a strong statement regarding the Sterlite shooting, is planning to release a song shortly, titled Periyar Kuththu. The song has Madhan Karky writing the lyrics while Ramesh Thamilmani is composing the music. The song is produced by Deepan Bhoopathy and Ratesh Velu and is expected to release soon.
தூத்துக்குடி சம்பவத்துக்கு காரணமான தமிழக அரசை தூக்கி எறிய வேண்டும் என நடிகர் சிம்பு கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் பேரணி சென்ற மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். நடிகர் சிம்புவும் தனது கண்டனத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.
#simbu #video #sterliteprotest #thoothukudi