ஆரஞ்ச், பர்பிள் கேப் வேண்டாம்.... கோப்பை போதும்... மஞ்சள் கேப் அணியின் இலக்கு!

2018-05-26 2,765

CSK looking to win the ipl cup for the third time. Their batting is very strong.

ஐபிஎல் சீசன் 11ன் பைன்ல்ஸ் விளையாடும் ஹைதராபாத் அணிக்கு பவுலிங் ஸ்டிராங் என்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கில் மிகவும் வலுவான அணியாக உள்ளது. இரண்டாண்டுகள் தடைக்குப் பின் திரும்பியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு ஐபிஎல்லில் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே பைனல்ஸ் நுழைந்துள்ளது.

ஹைதராபாத் அணியில் வில்லியம்சன், தவான் மட்டுமே 400க்கு மேற்பட்ட ரன்கள் எடுத்துள்ளனர். அதே நேரத்தில் சிஎஸ்கேவில் நான்கு பேர் 400க்கு மேற்பட்ட ரன்கள் எடுத்துள்ளனர். ராயுடு ஒரு சதத்துடன் 586 ரன்கள், தோனி 455 ரன்கள், ஷேன் வாட்சன் ஒரு சதத்துடன் 438 ரன்கள், சுரேஷ் ரெய்னா 413 ரன்கள் எடுத்துள்ளனர்.

Videos similaires