தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரும் மிக மோசமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது ஒரு புறம் இருக்க, அவர்களில் பலரும் அநியாயமான முறையில் உயிரை விட்டுள்ளனர் என்பதுதான் பெரும் வேதனையாக இருக்கிறது. ஆட்டோ பிடிக்கச் சென்ற பாவத்திற்காக ஜான்சி என்பவர் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடலை பிளக்ஸ் போர்டில் கட்டி தூக்கிச் சென்றுள்ளது காவல்துறை. இப்படி ஒவ்வொருவரின் கொலையும் பெரும் வேதனைக் கதையை உள்ளடக்கியதாக இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகள் இதுபோன்ற பல குடும்பங்களுக்கு மீளாத்துயரத்தை அளித்திருக்கிறது. அவர்களது வீடுகளுக்கு சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறினர். வெள்ளியன்று திரேஸ்புரம் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் உள்ளிட்ட குழுவினருடன் அப்பகுதி மக்கள் காவல்துறையினரின் அராஜகம் குறித்து குமுறலுடன் தெரிவித்தனர்.
The sad background of the victims in Tuticorin police firing in which 13 persons were killed the by the armed police.