Yet again Sunrisers bowlers proved. Sunrisers Hyderabad enters final.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனல்ஸ் நுழைவதற்கான 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் சீசன் 11ன் பைனல்ஸ்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே முன்னேறியுள்ளது. முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்று சிஎஸ்கே 7வது முறையாக பைனல்ஸ் நுழைந்துள்ளது.
ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் அடித்தது. அதை எதிர்கொள்ள முடியாமல் கொல்கத்தா 13 ரன்களில் தோற்று போனது.