நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இயக்குனர் ரவீந்திரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தனது 35வது பிறந்தநாளை கடந்த 20ம் தேதி கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்தார்.
அவரை வைத்து ஜெய் லவ குசா படத்தை இயக்கிய ரவீந்திரா பார்ட்டியில் கலந்து கொண்டார்.
பார்ட்டியில் மது அருந்திய ரவீந்திரா தனது காரில் வீட்டிற்கு கிளம்பினார். ஹைதராபாத்தில் உள்ள ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் கபே அப்பாட் அருகே இரவு 11 மணிக்கு சென்றபோது மற்றொரு கார் மீது தனது காரை மோதியுள்ளார்.