நாட்டின் மிகப் பெரிய மாநிலங்களில் பிரதமர் மோடி அரசு மீது கடும் அதிருப்தி நிலவுவதாகவும் தமிழகத்தில் இந்த எதிர்ப்பு அலை விஸ்வரூபமெடுத்திருப்பதாகவும் லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முதல்வராக பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தற்போதைய நிலையில் பாஜக அரசுக்கு எதிரான அலையே நாடு முழுவதும் வீசுவதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மோடி அரசின் செயல்பாடுகள் தொடர்பாக லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டின் பெரிய மாநிலங்கள் அனைத்திலும் மோடி அரசுக்கு எதிரான அலை வீசுவதாக அக்கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
According to Lokniti CSDS survery, Dissatisfaction with the Modi Govt has increased in almost all large states.