ஒரேயொரு ட்வீட் போட்டு மீண்டும் சிக்கிய ஆர்.ஜே. பாலாஜி- வீடியோ

2018-05-24 4,926

ஏ.பி.டி. வில்லியர்ஸ் பற்றி ட்வீட் போட்டு தமிழக மக்களிடம் மீண்டும் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 14 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று இரவு போலீசார் வீடு, வீடாக சென்று சிறுவர்களை கூட விட்டு வைக்காமல் வெளியே இழுத்து வந்து அடித்துள்ளனர்.
தூத்துக்குடியே பதட்டமாக உள்ள நிலையில் ஆர்.ஜே. பாலாஜியோ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஏ.பி.டி. வில்லியர்ஸ் பற்றி ட்வீட்டியுள்ளார்.
இங்கு தூத்துக்குடியே பத்திக்கிட்டு எரிகிறது உங்களுக்கு கிரிக்கெட், ஐபிஎல் தான் முக்கியமா, நீங்கள் தமிழகத்தில் தான் இருக்கிறீர்களா என்று நெட்டிசன்கள் பாலாஜியை விளாசியுள்ளனர்.



Tweeples blast RJ Balaji for tweeting about AB De Villiers while Tuticorin people are suffering at the hands of police.


#rjbalaji #tweet #sterlite #protest #thoothukudi #sterliteprotest