இருளர் கோத்தர் இன மக்களின் நடனங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பார்த்து ரசித்தார்.
உதகையில் 122 வது மலர் கண்காட்சி கடந்த 18 ம் தேதி முதல் தொடங்கியது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்ற இக்காண்காட்சியின் நிறைவு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். கண்காட்சியின் கடைசி நாளான நேற்று இருளர் கோத்தர் இன மக்கள் பாரம்பரிய உடையனிந்து நடனமாடினர். இதனை ஆளுநர் பார்த்து ரசித்தார். பின்னர் சுற்றுல்லா துறை தோட்ட கலையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இம்மலர் கண்காட்சியில் 18 ஆயிரம் வகையான மலர்கள் இடம்பெற்றிருந்தன. இக்கண்காட்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்தது.
des : Governor Darwaja Palwal looked at the dances of the dual Gothar people.