உலகின் முதல் பத்து செல்வச் செழிப்பு மிக்க நாடுகளைக் கண்டறிய ஏ.எஃப்.ஆர். ஆசிய வங்கி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வு தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கனடா, ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி இந்தியாவிற்கு 8,23,000 கோடி டாலர் சொத்து மதிப்பு உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்கா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின்படி அமெரிக்காவின் மொத்த சொத்து மதிப்பு 62,58,400 கோடி டாலராகும். இதற்கு அடுத்த இடங்களில் சீனா (24,80,300 கோடி டாலர்), ஜப்பான் (19,52,200 கோடி டாலர்) போன்றவை உள்ளன.