ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களின் அட்டை பெட்டிகள் கண்டெடுப்பு- வீடியோ

2018-05-22 4,344

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் தவறு நடந்திருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்துக்கு ஆட்சி, அதிகாரத்தைப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியைத் தழுவி பதவி விலகிய எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத்-த்துக்கு எடியூரப்பா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், விஜயபுரா மாவட்டத்தில் ஏராளமான விவிபேட் இயந்திரங்கள் அனாதரவாக விடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது தேர்தல் ஆணையம் கூறியபடி, கர்நாடக சட்டசபைத் தேர்தல் நேர்மையான முறையில், நியாயமான வழியில் நடந்திருக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் கூறிய கூற்றுக்களில் உண்மை இல்லை என்பதையும் உணர முடிகிறது என்று கூறியுள்ளார் எடியூரப்பா.

B S Yeddyurappa, the BJP chief in Karnataka has written to the Election Commission alleging foul play in the recently concluded Karnataka assembly elections. In a letter to the Chief Election Commissioner, O P Rawat, B S Yeddyurappa has said, “ this incident has exposed the hollowness of the claim of the election commission that assembly elections in Karnataka were held in a fair and free manner.”