des:திருப்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் காங்கேயம் சாலை அமர்ஜோதி கார்டன் அருகில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கார்த்திக். இவர் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலை பார்த்து வந்தார்.