முனியசாமி. பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் காவல்நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு தனி டைப் ஆள். அதற்கு ஒரு உதாரணம் என்ன தெரியுமா? கடந்த ஆண்டு பரமக்குடியில் ஒரு கோயில் விழா நடைபெற்றது. அப்போது விழா பாதுகாப்புக்காக முனியசாமி அங்கு வந்திருந்தார். கோயில் விழா என்பதால் பக்தி பாடல்களுடன் பாட்டு கச்சேரி நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பாதுகாப்புக்கு போன முனியசாமி, என்ன செய்தார் தெரியுமா? திடீரென்று கச்சேரி மேடையில் போலீஸ் உடையுடன் ஏறி, மைக்கை பிடித்து சினிமா துள்ளல் பாடல்களை பாட ஆரம்பித்துவிட்டார்.