கர்நாடக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று அம்மாநில முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள குமாரசாமி ஹசன் மாவட்டத்தில் உள்ள லஷ்மி நரசிம்மர் கோவிலில் வழிபாடு நடத்தினார். கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியான நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவானது. இதனையடுத்து ஆளுநரின் அழைப்பில் பேரில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றார்.