#karnatakafloortest #karnatakaassembly
There are 20 Lingayat MLAs in the Congress and JD(S) on whom all eyes would be. Will they back the Congress-JD(S) combine or go with the BJP and not prevent a Lingayat leader from continuing as Chief Minister?.The BJP is hopeful that these Lingayat MLAs would cross-vote and save the government. These MLAs have a tough call to make when the trust vote in the Karnataka legislative assembly takes place.
காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியில் உள்ள 20 லிங்காயத்து எம்எல்ஏக்கள்தான் இன்று கர்நாடக சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் மாற்றத்தை உண்டு பண்ண கூடியவர்கள். இவர்கள் யாருக்கு சாதகமாக இருக்கிறார்களோ அவர்களே வெற்றிபெற வாய்ப்புள்ளது. இன்று மாலை 4 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.