இசையமைப்பாளராக இருந்து நடிகரான ஜி.வி.பிரகாஷ் சினிமா துறைப் பங்களிப்போடு நின்றுவிடாமல் சமூக பிரச்னைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதற்காக, அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் 'டார்லிங்', 'த்ரிஷா இல்லேனா நயன்தாரா' உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகராகவும் பரிச்சயமானார்.
இந்நிலையில் அவரது சமுக நலப் பணிகளை பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. St.Andrews இறையியல் பல்கலைக்கழகம் ஜி.வி.பிரகாஷுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது.
Music composer GV Prakash gives his voice for social issues. He has received a honorable doctorate for social services.