சேலம் அருகே குடும்ப தகராறு காரணமாக பிள்ளைகள் முன்னிலையிலேயே மனைவியின் தலையில் கணவன் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் சரவணன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.