நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல அது திட்டமிட்ட கொலை என்று ஓய்வு பெற்ற டெல்லி துணை போலீஸ் கமிஷனர் வேத் பூஷன் தெரிவித்துள்ளார்.
நாத்தனார் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உயிர் இழந்தார். அவர் மது போதையில் குளியல் தொட்டியில் மூழ்கி உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் ஸ்ரீதேவியின் மரணத்தில் பலருக்கும் சந்தேகம் ஏற்கப்பட்டது.
ஸ்ரீதேவியின் மரணத்தில் பலருக்கும் சந்தேகம் உள்ள நிலையில் அவரின் மரணம் திட்டமிட்ட கொலை என்று ஓய்வு பெற்ற டெல்லி துணை போலீஸ் கமிஷனர் வேத் பூஷன் தெரிவித்துள்ளார்.
வேத் பூஷன் தனியார் துப்பறியும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். ஸ்ரீதேவி மரணம் அடைந்த விதத்தை பார்த்தாலே அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்று தெரிகிறது என்கிறார் வேத் பூஷன்.
முன்னதாக ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இயக்குனர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 5.7 அடி உயரமுள்ள ஸ்ரீதேவி எப்படி 5.1 அடி குளியல் தொட்டியில் மூழ்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியிரு்தார். ஆனால் அவரின் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 11ம் தேதி தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Ved Bhushan, retired ACP of Delhi said that Bollywood actress Sridevi's death was not accidental drwoning but a planned murder. Sridevi death is not natural. It is a planned murder says Assistant Comissioner of Police. The investigation is going on.