முதல் கையெழுத்தில் எடியூரப்பா விவசாய கடன்கள் தள்ளுபடி

2018-05-17 1

கர்நாடக முதல்வராக பதவி ஏற்கும் எடியூரப்பா, இன்று முதல் கையெழுத்தாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழம்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. எடியூரப்பா முதல்வரானதும் முதலில் கையெழுத்திடப்போகும் திட்டம் பற்றி பாஜக கட்சியினர் தகவல் வெளியிட்டு இருக்கிறார்கள். ரூ.1 லட்சம் வரையிலான விவசாய கடன் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Yeddyurappa is going to sworn as CM today, and immediately he is going to sign the total Agriculture Loan waiver for entire karnataka.

Videos similaires