மே 18-ம் தேதி அறிவிக்கும் ஆர்.ஜே.பாலாஜி!- வீடியோ

2018-05-16 1

சமீபத்தில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்வு... ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்குகிறார் என்ற சுவர் விளம்பரம் தான். அந்த விளம்பரத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
கட்சிக் கொடியின் புகைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி ஃபேஸ்புக்கில் வெளியிட ஆர்.ஜே.பாலாஜியும் அரசியல் பிரவேசத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் பரவியது. அதையடுத்து, விசாரித்ததில், கன்னடத்தில் வெளியான 'ஹம்புல் பொலிட்டிஷியன் நொக்ராஜ்' எனும் படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாகவும், அதில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பவிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் போதாதா என ஆர்.ஜே.பாலாஜியின் வருகையை நினைத்து பயந்தவர்களுக்கு இந்தச் செய்தி ஆறுதல் தந்திருக்கிறது. மே 18-ம் தேதி இது உறுதியாகும்.


Actor RJ Balaji to announce his new political film on May 18.


#rjbalaji #politics #movies #rj #balaji #katchi