காங்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் துணை முதல்வர் யார்?- வீடியோ

2018-05-16 632

காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் துணை முதல்வர் யார் என்பது குறித்து கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டசபை தலைவர் மற்றும் துணை முதல்வர் யார் என்பது குறித்து தேர்வு செய்யப்படவுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் 78 இடங்களை கைப்பற்றியுள்ள காங்கிரஸ், பாஜக ஆட்சியமைப்பதை தடுப்பதற்காக வெறும் 38 இடங்களை வென்ற ஜேடிஎஸ் கட்சியிடம் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Karnataka congress MLAs meets conducts today, to elect assemblyfloor leader and decide who will be the dy CM under Kumaraswamy.

Videos similaires