கர்நாடகாவில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் வாங்கியுள்ள ஓட்டுக்கள் படுமோசமாக உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக 3 தொகுதிகளில் போட்டியிட்டது. பெங்களூரிலுள்ள காந்திநகர், கோலார் மாவட்டத்திலுள்ள தங்கவயல், சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது அதிமுக. ஹனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஷ்ணுகுமார், வெறும் 135 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். பல்வேறு சுயேச்சைகள் இவரை விட அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். நோட்டா 668 வாக்குகளை பெற்றிருந்தது. தங்கவயல் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பு, 666 வாக்குகளை பெற்றுள்ளார். தமிழர்கள் 70 சதவீதம் உள்ள இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ரூபகலா 37993 வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்தார்.
In Karnataka AIADMK battle goes in vain as none of the constituency people support them.