இவ்வளவு கேட்சுகளை தவற விடுவது எதனால்?..என்ன காரணம்?- வீடியோ

2018-05-14 1,725

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஐபிஎல் போட்டிகளில் உள்ளூர் வீரர்கள் முதல் ஃபீல்டிங்கில் கில்லியாக இருக்கும் சர்வதேச வீரர்கள் என அனைவரும் கேட்ச் பிடித்தார்களோ இல்லையோ... நிச்சயம் ஓரிரு கேட்சுகளைத் தவறவிட்டுள்ளனர். அதே நேரத்தில், "பிடிக்கவே முடியாது, வாவ்.. எப்படி இந்த மாதிரி எல்லாம் கேட்சுகளைப் பிடிக்கிறார்கள் என்று ரசிகர்கள் கொண்டாடியத் தருணங்களும் இருக்கத்தான் செய்கிறது." ஒரு அணிக்கு ஒரு பயிற்சியாளர் என்கிற நிலை மாறி, பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங், 'மெண்டல் கண்டிஷனிங்' (போட்டிகளுக்கு ஏற்றவாறு மனநிலையை சீராக வைத்துக்கொள்ள) என்று விளையாடுவதற்கு இருபது நபர்கள் என்றால், அவர்களை பல்வேறு துறைகளில் பயிற்சியில் ஈடுபடுத்த கிட்டத்தட்ட் அதே அளவிற்கு ஆட்கள் இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பயிற்சியாளர், மேற்பார்வையாளர், மற்றும் முழு உடற்தகுதியோடு இருந்தால் மட்டுமே ஆட முடியும் என்கிற பலத்த கட்டுப்பாடுகள் இருந்தும், பல்வேறு கேட்சுகளை கோட்டை விடுவது எதனால் என்று எவ்வளவு ஆராய்ந்தாலும், இதுதான் பிரச்சனை என்று சொல்ல முடியவில்லை.

It is perplexing to see the spike in dropped catches on this IPL. There should be a definite reason as every team on the tournament contributes a fair sum to the dropped list. Here’s a small take away on one of the reason behind to it.

Videos similaires