அந்த நடிகையின் கணவர் வந்தால் தான் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயார் என்று
ராய் லட்சுமி தெரிவித்துள்ளார். உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2
நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. பிக் பாஸ் வீடு சென்னையில்
அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் நடிகை ராய் லட்சுமி கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது.
தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான தகவலை அறிந்து ராய் லட்சுமி
அதிருப்தி அடைந்தார்.
Actress Raai Laxmi has tweeted that, she will participate in Bigg Boss
show only if Bollywood actor Karan Singh Grover comes as her partner.