தண்ணீர் பஞ்சத்தால் தினமும் கழிப்பறை செல்ல 4 கி.மீ. நடக்கும் மாணவிகள்- வீடியோ

2018-05-12 1,535

தண்ணீர் பஞ்சம் காரணமாக மத்தியபிரதேசத்தில் அரசு பள்ளி மாணவிகள் தினமும் கழிப்பறைக்காக நான்கு கிலோ மீட்டர் நடந்து செல்லும் அவல நிலை காணப்படுகிறது. மத்தியபிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள அரசு விடுதி ஒன்றில் தங்கியுள்ள மாணவிகள் ஆண்டுதோறும் கோடை காலத்தில் கழிப்பறை செல்வதற்கே பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

தண்ணீர் பஞ்சம் காரணமாக தினமும் சுமார் 4 கிமீ தொலைவு நடந்து சென்று கழிப்பறையை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் விடுதி ஊழியர்கள் துணையுடன் அவர்கள் கையில் வாளியுடன் நடந்து செல்லும் காட்சி பரிதாபமாக இருக்கின்றது.


For the basic need of using a toilet, young girls from Madhya Pradesh's Damoh district, 250 km from state capital Bhopal, have to walk daily for about four kilometres. With buckets in their hand, they travel the distance with their school teacher and other staff workers. The culprit being acute water crisis in their area.

Videos similaires