சென்னையில் ஆட்டோவில் சென்ற கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்ய முயற்சி செய்த ஓட்டுனர் உட்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை கிண்டியிலிருந்து அய்யப்பன்தாங்கல் செல்லும் ஆட்டோ ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவர் ஏறினார். ஆட்டோ சென்றுகொண்டிருக்கும்போது, ஓட்டுனரும் மற்றொரு நபரும் மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும் மாணவியை கடத்தி வன்கொடுமை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.