சூடானில் வலுக்கட்டாயமாக உறவு வைத்த கணவரை கத்தியால் குத்தி கொன்ற மனைவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சூடான் நாட்டை சேர்ந்தவர், நவுரா உசேன். 16 வயதான நிலையில் நவுராவுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் நவுராவுக்கோ திருமணத்தில் துளியும் விருப்பமில்லை. படித்து ஆசிரியையாக வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது.