பெரம்பலூர் அருகே நேற்று நள்ளிரவில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்று, பெரம்பலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில் மோதியது. சாலைத் தடுப்பில் மோதிய அந்த கார், அதையும் தாண்டி எதிர்த்திசையில், சென்னை-திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியது.