தனியார் துறைமுகத்தில் சீனாவிற்கு கடத்த முயன்ற 20 கோடி மதிப்புள்ள செம்மரங்களை புலணாய்வு துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள தனியார் துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கண்டெய்ணர்களில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலணாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தனியாருக்கு சொந்தமான துறைமுகத்தில் சோதனை நடத்தினர். அப்போது கண்டெய்ணர் ஒன்றில் 20 கோடிரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் இருப்பதையும் அவைகள் சீனாவிற்கு கடத்தப்படுவதையும் கண்டுபிடித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் செம்மரங்களை கடத்திய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
des ; Investigative seizures are being seized and investigated by the 20 crore worth of cattle sought to cross China in the private harbor.