மக்களின் சிரமங்களை எளிதாக்க காங்கிரஸ் கொண்டு வந்த ஆதார் திட்டத்தை, மக்களைக் கண்காணிப்பதற்காக பாஜக பயன்படுத்துவது மிகவும் கண்டனத்திற்குரியது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் வருகிற 12ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பிரசாரங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.