இதே நாள் 22 வருடங்களுக்கு முன்பு - இந்தியன்- வீடியோ

2018-05-09 14

1996-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்தது 'இந்தியன்' திரைப்படம். 'இந்தியன்' திரைப்படம் வெளிவந்து 22 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
கமல் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த இந்தப் படம் சூப்பர்ஹிட் ஆனது. சுதந்திரப் போராட்ட வீரராக இந்தியன் தாத்தா 'சேனாபதி' கெட்டப்பிலும், அவரது மகனாக சந்துரு எனும் இளைஞர் கேரக்டரிலும் இரு வேடங்களில் நடித்திருந்தார் கமல்.
சமூகத்தில் லஞ்சம், ஊழல் என தவறு செய்பவர்களை சேனாபதி தனது பாணியில் தண்டிப்பது தான் இப்படத்தின் கதை. பல வருடமாக இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்புதான் வெளியானது.
22 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'இந்தியன்' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு மிஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அடுத்த பாகத்தை இயக்கத் தயாராகி வருகிறார் இயக்குநர் ஷங்கர்.



'Indian 2' fan made poster goes viral on social media now.


#indian2 #22yearsofindian #senapathyisback #kamalhaasan

Videos similaires