சென்னை உயர்நீதிமன்றத்தில் இரும்புத்திரை படத்துக்கு எதிராக வழக்கு!- வீடியோ

2018-05-09 1

விஷால் நடித்துள்ள 'இரும்புத்திரை' படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த தவறான

கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை

உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நாமக்கல்லைச் சேர்ந்த நடராஜன் என்பவர் 'இரும்புத்திரை' படத்துக்கு தடை கோரி சென்னை

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த

நீதிபதி படத்திற்கு தடை விதிக்கமுடியாது என உத்தரவிட்டுள்ளார்.
இரும்புத்திரை படத்தில், ஆதார் அடையாள அட்டைக்கு கொடுக்கப்படும் தகவல்கள் தவறாக

பயன்படுத்தப்படுவதாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்தக் காட்சிகளுடன் படம்

வெளியானால், ஆதார் குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படும் எனவே அந்தக்

காட்சிகள் நீக்கப்படும் வரை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என நடராஜன் மனு

அளித்திருந்தார்.



HC clear on Irumbuthirai release. Judge says, "We can't ban the film

'Irumbuthirai' which got censor approval."

Videos similaires