அஜித் நடித்துவரும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கி ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
விசுவாசம் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிக்கான ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இந்தப் பாடல்
ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளன.
இந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களின் மூலம் சில முக்கியமான விஷயங்கள் தெரியவந்துள்ளன.
அஜித் இந்தப் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல் லேசாக ப்ரவுன் ஹேர் ஸ்டைலில்
இருக்கிறார்.
ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் எதுவும் வெளியாகிவிடக்கூடாது என்பதில் படக்குழுவினருக்கு
கெடுபிடி விதிக்கப்பட்டிருந்தாலும், சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி
வைரலாகியுள்ளன. இந்தப் புகைப்படங்கள் மூலம் சில விஷயங்கள் தெரிய வருகின்றன.
கிராமத்து செட் போடப்பட்டு உருவாகிவரும் 'விசுவாசம்' பாடலில் அஜித் மஞ்சள் சட்டை அணிந்து ஆடும் காட்சி புகைப்படம் லீக் ஆகியுள்ளது. இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் இல்லாமல் பிரவுன் - பிளாக் ஹேர் ஸ்டைலில் இருக்கிறார்.
மேலும், ஷூட்டிங்கின்போது, தேனி பதிவு எண் கொண்ட ராயல் என்ஃபீல்டு புல்லட் ஒன்று நிற்கிறது.
இது படத்தில் அஜித் ஓட்டும் புல்லட் எனத் தெரிகிறது. இதனால், 'விசுவாசம்' படம் தேனியை
கதைக்களமாகக் கொண்ட படம் என சமூக வலைஞர்கள் யூகித்துள்ளனர்.
TN 60 AB 2435 எனும் பதிவு எண் கொண்ட புல்லட் புகைப்படமும் இப்போதே வைரலாகி வருகிறது.
அஜித்தின் கெட்டப்பை ரசிகர்கள் பின்பற்றுவது போல அஜித் ஓட்டும் ராயல் என்ஃபீல்டு பைக்கும்
ரசிகர்களால் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'Viswasam' shooting has been taking place in Hyderabad Ramaji rao Film City. The pictures taken during the shooting are leaked on social networks.
Some important things have been revealed by the shooting spot pictures.
#viswasam #song #shooting #leaked #pictures