பெண்கள் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள 'யாளி' படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகை அக்ஷயா. யாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் பி.வாசு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போஸ்டரை வெளியிட்டார். இப்படத்தை இயக்கும் அக்ஷயா எல்லோருக்கும் தெரிந்த முகம்.. பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அந்த முகத்தை தரிசிக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது. மேலும் அவர் கூறியதாவது, "இது ஒரு ரொமான்டிக் த்ரில்லர் படம். ஜனனி என்ற பெண்ணை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் மையக்கரு. படத்தில் பெண்கள் ஒவ்வொருவராக கடத்தப்படுவார்கள். அவர்கள் யார் என்பது தெரியாது. ஜனனியையும் சிலர் பின்தொடர்வார்கள். ஜனனியை அவர்கள் கடத்தினார்களா? இல்லை அவள் தப்பித்தாலா? என்பதை த்ரில்லிங்காக காட்சிபடுத்தியுள்ளோம். பெண்களை கொடுமைப்படுத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்ன என்பதை க்ளைமாக்ஸ் காட்சி சொல்லும். ஜூன் மாதத்தில் இசை வெளியீடும், ஜூலை மாதத்தில் பட வெளியீடும் இருக்கும். ஒரு பெண்ணாக இருந்துகொண்டு சினிமாவில் சாதிப்பது அவ்வளவு எளிதல்ல. மிகவும் சிரமப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளேன். நன்றி" என்றார் அக்ஷயா. நாங்களும் பார்த்து ரசிக்க காத்திருக்கிறோம் அக்ஷயா. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
The upcoming tamil movie Yalee's first look was launched yesterday in Chennai by director P.Vasu. Yalee first look poster was released yesterday.
#yalee #firstlook #poster