des:தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது கார் மோதியதில் தூக்கிவீசப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் குலை நடுங்க வைக்கின்றன. தூத்குக்குடி ஆட்சியரகம் அருகே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு ஒரு புறத்தில் இருந்து மறு புறத்தில் உள்ள சாலையை கடக்க 46 வயது மதிக்கத்தக்க ஒருவர் வேகமாக சென்டர் மீடியனை நோக்கி ஓடி வந்தார்.