இளைஞரின் சாவில் மர்மம் இருப்பதாக் கூறி ஆத்திரத்தில் பெண்ணின் வீட்டை சூறையாடிய உறவினர்கள் 10 பேர் மீது போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி வேப்பாலம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரது மகன் சதீஷ், இவருக்கும் அருகிலுள்ள கிராமமான சென்றாயநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த சத்யா என்பவரும் இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தநிலையில், கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சதீஷ்க்கும் சத்யாவிற்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்ப்பட்டு ஒருவாரமாக பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் சதீஷ் சத்யாவின் வீட்டின் முன்பு இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. பிறகு சதீஷ் தூகிட்ட தகவலறிந்து வந்த உறவினர்கள் சதிஷ்ன் சாவில் மர்மம் இருப்பதாகவும் இதனால் இவரது உடலை தர்மபுரி மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட வேண்டுமென போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு போச்சம்பள்ளி பொறுப்பு காவல் ஆய்வாளர் கபிலன், உதவி ஆய்வாளர் கோவிந்தராசன் ஆகியோர் சமாதானப்படுத்தி உடல் பிரேதப்பரிசோதனை தர்மபுரியில் செய்துகொடுகிறோம் என்று கூறி. உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் சதிஷ்ன் உறவினர்கள் சிலர் ஆத்திரமடைந்து சத்யாவின் வீட்டை உடைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டதுமேலும் பெண்ணின் வீட்டை தாக்கிய உறவினர்கள் 10 பேர் மீது போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.