கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். 2 வருடங்களுக்கு பின் அவர் இப்போதுதான் தேர்தலில் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.