தருமபுரி மாவட்டத்தில் கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக போலீஸார் 3 பேரை கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண். இவர் கணவனால் கைவிடபட்டவர். தனது தாத்தாவின் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு வாய்பேசமுடியாத தனது தாயுடன் வந்துள்ளார். அப்போது பக்கத்து படுக்கையில் இருந்த நோயாளியின் உறவினரான நைவின்மாலிக் என்பவர் இந்த பெண்ணுக்கு உதவி செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கம் காரணமாக, அடிக்கடி இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டனர்.