ஏரியில் குதித்து காப்பாற்றிய போலிஸ் !பொதுமக்கள் பாராட்டு- வீடியோ

2018-05-05 519

மேம்பாலத்தில் இருந்து ஏரியில் தவறி விழுந்த தந்தை மகனை ஏரியில் குதித்து காப்பாற்றிய போக்குவரத்து காவலரை பொதுமக்கள் பாராட்டினர்



பூவிருந்தவல்லி அம்மன் நகரை சேர்ந்த ஜெமினி மற்றும் அவரது மகன் அசோக் சாலையோரத்தில் மணி வளையல் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்து வந்துள்ளனர். படப்பையில் இருந்து தனது மொபெட்டில் இருவரும் பேரும் பூந்தமல்லி நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஜெமினி மொபெட்டை ஓட்ட போரூர் ஏரி மீது வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி சாலையின் தடுப்பில் மொபெட் மோதியதில் ஜெமினி அசோக் இருவரும் நிலை தடுமாறி மேம்பாலத்தின் மேல் இருந்து போரூர் ஏரியில் விழுந்தனர்.இதனைக்கண்டதும் அங்கு போக்குவரத்து பனியில் இருந்த போக்குவரத்து போலீஸ் வெங்கடேசன் என்பவர் ஏரியில் குதித்து இருவரையும் மீட்டார். ஏரியில் தண்ணீர் இருந்ததால் இருவரும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார்கள் போக்குவரத்து காவலரின் தைரியமான இந்த செயலால் இருவர் உயிர் தப்பினர்

Videos similaires