‘கா’ பட பூஜை- வீடியோ

2018-05-03 284

ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கவுள்ள ‘கா’ படத்திற்கான படபூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ஆண்ட்ரியா உட்பட படத்தின் குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். இயக்குநர் நாஞ்சில் உருவாகவுள்ள இப்படம் முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படமாகும். ‘கா’ என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள் . காட்டை மையப்படுத்திக் கதை உருவாக்கப் பட்டுள்ளதால் இப்படத்திற்கு ‘கா’ என்று பெயர் சூட்டியுள்ளனர். விலங்குகள் வாழும் காடுகளுக்கு சென்று அங்குள்ள மிருகங்களைப் புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞராக நடிக்கிறார். வைல்டு லைப் ஃபோட்டோகிராபி கலையைக் குறித்து தயாராக இருக்கிறது இப்படம். இப்படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் துவக்கத்தை முன்னிட்டு ஆண்ட்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Kaa movie inaugration , shooting pooja happened recently. Andreah spoke at the function. Lot of other tamil cinema celebrities attended the function as well.

#ka #kaa #tamilmovie #andrea #andreah