அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாக மட்டுமே பார்க்கவேண்டும்
இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் வேண்டுகோள்
மே மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் ஹாரர்
காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாகத்தான் பார்க்கவேண்டும் என்று அப்பட இயக்குநர் சந்தோஷ்
P.ஜெயகுமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின்
பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நாயகன்
கௌதம் கார்த்திக், நாயகிகளுள் ஒருவரான யாஷிகா ஆனந்த், நடிகர் சாரா, இயக்குநர் சந்தோஷ் P.
ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் கௌதம் கார்த்திக் பேசுகையில்,‘இந்த படத்தின்
கதையை இயக்குநர் என்னிடம் சொல்லவில்லை. இருந்தாலும் படபிடிப்பு தளத்திற்கு வந்து குழு
விவாதம் நடத்தி காட்சிகளை படமாக்கினார். இந்த படத்தில் என்னுடன் ஒரு பாடலுக்கு நடிகர் ஆர்யா
நடனமாடியிருக்கிறார். இதற்காக அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். எனக்கு அவருடன் இணைந்து
நடனமாட ஆசையிருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறியிருக்கிறது. இந்த படம் ஃபுல் அண்ட்
ஃபுல் ஃபன் அண்ட் எண்டர்டெயின்மெண்ட் தான். இதில் மெசேஜ் எதுவும் இல்லை. அதை
எதிர்பார்க்காதீர்கள். என்னுடன் நடித்த மூன்று நடிகைகளுக்கும் நன்றி சொல்கிறேன். ஏனெனில் அடல்ட்
ஹாரர் காமெடி படம் என்று தெரிந்தும் நடிக்க ஒப்புக்கொண்ட அவர்களின் துணிச்சலை
பாராட்டுகிறேன்.’ என்றார்.
Director Santhosh P Jayakumar, whose upcoming film Iruttu Araiyil Murattu
Kuthu starring Gautham Karthik has been slated for a May 4 release, has
released a statement requesting everyone to watch and treat the film as, and
only as, an entertainer.
In a press meet at Prasad Film Lab today in which Gautham Karthik, Santhosh,
Yashika Anand and others participated, Santhosh said, "This is my second
film, and it's an adult horror comedy. Some of you might wonder why I make
such films and ruin the industry, instead of films with messages. But this
is a genre, and it has its place everywhere in world cinema. This film will
only be an entertainer, and I request everybody to treat it that way only."
#iruttuaraiyilmurattukuthu #gauthamkarthik #pressmeet