காவிரி வரைவு திட்டத்தை மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. காவிரி வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க இன்னும் இரண்டு வாரம் கால அவகாசம் கேட்டுள்ளது. இதற்கு கர்நாடக தேர்தலை காரணம் காட்டியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம், ஆனால் காவிரிக்கு திட்டம் ஒன்றை உருவாக்குவோம் என்றும் கூறியது. இதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்பும் கூட இரண்டு வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு இருக்கிறது.
Cauvery Board: SC will hear the case today, Center may seek for 2 weeks extension to form a scheme for Cauvery.