பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் இணைந்து 'சீமராஜா' படத்தில் நடித்து முடித்துள்ள
சிவகார்த்திகேயன் அடுத்து 'இன்று நேற்று நாளை' படத்தின் டைரக்டர் ரவிகுமார் ராஜேந்திரன்
இயக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தில் நடிக்க கமிட் ஆனார்.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரகுல் பிரீத் சிங் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
கருணாகரன், யோகிபாபு ஆகியோர் காமெடியன்களாக நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங்
இன்னும் தொடங்கப்படாத நிலையில் அடுத்த படத்திலும் கமிட் ஆகிவிட்டார் சிவா.
'பாஸ் என்கிற பாஸ்கரன்' இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவா. இப்படத்தின்
ஷூட்டிங் நேற்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. ரவிகுமாரின் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்திலும்,
ராஜேஷின் காமெடி கமர்ஷியல் படத்திலும் ஒரே நேரத்தில் நடிக்கிறார் சிவா.
இப்படத்தில் சிவகார்த்திகேயனோடு சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் நடிக்கவிருக்கும்
மற்ற நடிகர், நடிகைகள் யாரென இன்னும் அறிவிக்கப்படவில்லை. 'வேலைக்காரன்' படத்தில் சிவா
ஜோடியாக நடித்த நயன்தாரா இப்படத்திலும் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார். முன்பே, ஞானவேல்ராஜா தயாரிப்பில்
நடிக்க சிவா ஒப்புக்கொண்டநிலையில் பல்வேறு படங்களால் தள்ளிப்போனது. தற்போது காமெடி
டைரக்டர் ராஜேஷின் படத்தில் இணைந்துள்ளனர்.
Sivakarthikeyan to act in director Rajesh's film produced by Studio green
productions. The shooting of the film started with the pooja yesterday.
#sivakarthikeyan #newmovie #pooja